அவர்கள் கூறும் கதைகள், பழக்கவழக்கங்கள், பண்பாடுகளால் ஈர்க்கப்படும் குழந்தைகள், நாளடைவில் தாத்தா பாட்டிகளைப் போலவே நீதி நெறிமுறை பிறழாமல் வாழவும் பக்குவப்பட்டுப் போவார்கள்.
ஆனால், இப்போது அந்த வாய்ப்பு இல்லை. இந்தக் கவலையைப் போக்கும் வகையில் ஒலித்து வருகிறது தாத்தா, பாட்டிகளால் நடத்தப்படும் வானொலி நிலையம்.
கோவை மாவட்டம், மாதம்பட்டி பகுதியில் அமைந்துள்ளது ‘தபோவனம் - மூத்தோர் குடியிருப்பு’ வளாகம். இங்குள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில் 250க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்கியுள்ளனர்.இவர்கள் அனைவரும் இணைந்து இணைய வானொலியை நடத்தி வருகின்றனர்.
கதை சொல்வது, இசைக்கருவிகளை வாசிப்பது, கர்நாடக சங்கீதம், பாடல் பாடுவது, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது, கணினியில் ஒலித்தொகுப்பு செய்து இணையத்தில் பதிவேற்றுவது என 60 வயதுக்கு மேலான ஒவ்வொரு மூத்த குடிமக்களும் தங்களால் இயன்ற அளவில் பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
ராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகளும் இந்த இணைய வானொலியில் சொல்லப்பட்டு வருகின்றன.
மத்திய அரசு சார்பில், மூத்த குடிமக்களுக்கான இணைய வாெனாலித் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 10 மாநிலங்களில் 10 இடங்களில் மத்திய அரசின் நிதி உதவியுடன் மூத்த குடிமக்களுக்கான இணைய வானொலி நிலையம் உருவாக்கத் திட்டமிடப்பட்டது. அதன்படி, கோவையில் உள்ள பச்சாபாளையத்தில் ‘அனுபவ்’ என்ற மூத்த குடிமக்களுக்கான பிரத்தியேகமான இணைய வாெனாலி நிலையம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது
Comments
Post a Comment