ஜியோ 5ஜி சேவைகளின் விலை என்னவாக இருக்கும்?


 5G சேவைகளை அனுபவிக்க புதிய சிம் தேவைப்படுமா என்பது குறித்து சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது. ஆனால், இது தொடர்பாக நிறுவனங்கள் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. தொலைத்தொடர்பு அமைச்சகமும் இது குறித்த எந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை. இருப்பினும், இந்தியா 3ஜியிலிருந்து 4ஜிக்கு மாறியபோது, ​​புதிய வேகத்தைப் பெற பயனர்கள் புதிய 4ஜி சிம்மைப் பெற வேண்டியிருந்தது என்பதை நாம் மறக்கக்கூடாது.

Jio 5G அறிமுகம் இந்த மாதமா? எந்த நகரங்களில் 5G முதலில் களமிறங்குகிறது? லிஸ்ட் இதோ!

புதிய சிம் கார்டுகள் பற்றி டெலிகாம் நிறுவனங்கள் என்ன சொல்கிறது?

இதேபோல், இந்தியாவில் 5ஜி சேவையை அதற்குரிய வேகத்துடன் மக்கள் பெறுவதற்கு கட்டாயம் புதிய சிம் கார்டுகளை நிறுவனங்கள் விநியோகம் செய்யும் என்று ஒரு இணையதள தகவல் தெரிவிக்கிறது. இது எவ்வளவு உறுதியானது என்பது நமக்குத் தெரியவில்லை, ஆனால், முன்னர் நடந்த விஷயங்களை வைத்துப் பார்க்கையில், புதிய சிம் கார்டுகளை வாங்க வேண்டிய சாத்தியங்கள் அதிகமாக இருக்கிறது என்பதே இப்போதைய கருத்து. இதுகுறித்து நிறுவனங்கள் என்ன அறிவிப்பை வெளியிடும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஜியோ 5ஜி சேவைகளின் விலை என்னவாக இருக்கும்?

5ஜி சேவைகளின் விலை குறித்தும் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. விலை உயர்வுக்குப் பிறகு, அதிகபட்ச பலன்களைக் கொண்ட 4G ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை ரூ.400 முதல் துவங்கி ரூ. 500 வரை செல்லும் என்று ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், 5ஜி ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை இந்தியாவில் ரூ.500 மற்றும் அதற்கு மேல் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக 5ஜி, 4ஜி நெட்வொர்க்கை விட அதிக கட்டணம் கொண்டதாகத் தான் இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.

Comments